டெல்லி சட்டமன்ற தேர்தல்- ஆளும் கட்சியே முன்னிலை

delhiassembly poll 06 2020 a
delhiassembly poll 06 2020 a

இந்திய தலைநகர் டெல்லியில், நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

இந்திய தலைநகரான டெல்லியில் கடந்த 8 ஆம் திகதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

மத்திய ஆளுங்கட்சி அதிகம் கைப்பற்ற வேண்டும் என்று எண்ணிய முக்கியமான இடம் டெல்லியாகும். 70 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட இந்த மாநிலத்தில், காலை 8மணி முதல் வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

தற்போது வரையுள்ள நிலவரப்படி மாநில ஆளும் கட்சியான ஆம் ஆத்மி 56 இடங்களிலும், பாஜக 14இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

முன்னதாக வெளியிட்ட கருத்துக்கணிப்பிலும் ஆம் ஆத்மியே வெற்றிபெறும் என்று முடிவுகள் வெளியானது. எனவே ஆம் ஆத்மி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பில் பலரும் முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.