அணுவாயுத பரிசோதனைகளை மேற்கொள்ளும் வடகொரியா

52DA7369 ECDF 4334 90E9 329CB3CA0206
52DA7369 ECDF 4334 90E9 329CB3CA0206

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொருளாதார தடைகளையும் மீறி வடகொரியா அணுவாயுத பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் இரகசிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொருளாதார தடைகள் காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில் கடந்த வருடத்தில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதோடு சீனாவிற்கு 370 மில்லியன் டொலர் பெறுமதியான நிலகரியினையும் ஏற்றுமதி செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையினால் வடகொரியாவின் பொருளாதார குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள 67 பக்கங்களை கொண்ட குறித்த அறிக்கை அடுத்த மாதம் வௌியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அணுவாயுத பயன்பாடு, தயாரிப்பு மற்றும் பரிசோதனை ஆகிய விடயங்கள் தொடர்பில் வடகொரியாவுடன் அமெரிக்கா பேச்சுக்களை முன்னெடுக்கவும் முயற்சிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.