இத்தாலியின் வடக்கு பகுதிக்கு செல்வதை தவிர்க்கவும்… கனடா எச்சரிக்கை!

1583209216 s
1583209216 s

உலகையே உலுக்கும் கொரோனோ வைரசின் தாக்கதை அதிகம் கொண்டுள்ள இத்தாலியின் வட பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு கனடா அந்நாட்டுப் பிரஜைகளுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளது.

திங்கட்கிழமை காலை நடைமுறைக்கு வந்த இந்த பயண எச்சரிக்கையில் ஆஸ்டா பள்ளத்தாக்கு, பீட்மாண்ட், லோம்பார்டி, ட்ரெண்டினோ-ஆல்டோ அடிஜ், ஃப்ரியூலி-வெனிசியா கியுலியா, வெனெட்டோ, லிகுரியா மற்றும் எமிலியா-ரோமக்னா ஆகிய இத்தாலி நகரங்களுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு தனது பிரஜைகளை கனடா அறிவுறுத்தியுள்ளது.  

அந்த பிராந்தியங்களில் உள்ள முக்கிய நகரங்களான மிலன், வெனிஸ், டுரின் மற்றும் ஜெனோவா ஆகியவையும் எச்சரிக்கப்பட்ட ஆபத்தான இடங்களில் அடங்குகின்றன.  

இதேவேளை, வடக்கு இத்தாலியில் ஏற்கனவே உள்ள கனேடியர்கள் அவர்கள் அங்கேயே தொடர்ந்தும் இருக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.  

புதிய கொரோனோ வைரஸால் ஆசியாவிற்கு வெளியே மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடாக இத்தாலி உள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை காலை வரையான நிலவரப்படி இங்கு 2,036 பேர் கொரோனோ தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 பேர் இறந்துள்ளனர்.  

இந்த எண்ணிக்கை கடந்த நான்கு நாட்களுக்குள் இரட்டிப்பாக அதிகரித்தது.  

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவும் இதேபோன்ற பயண ஆலோசனையை வெளியிட்டது.

இதேவேளை, கொரோனோ வைரஸ் காரணமாக பயணத் திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறு தனது குடிமக்களை கனடா தாமதமாகவே வலியுறுத்தியுள்ளது.  

அத்துடன் இத்தாலியின் வடக்கு பிராந்தியத்தையும் தவிர பிற பகுதிகளுக்கு பயணிப்பவர்கள் சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தேவையில்லை என்று அரசாங்கம் கூறியுள்ளது.