கொரோனா வைரஸை கொல்லும் முகக் கவசங்கள் அறிமுகம்!

4 DD
4 DD

சீனாவில் வைரஸ், பாக்டீரியாக்களை கொல்லக் கூடிய நவீன நானோ சில்வர் முகக் கவசங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மாஸ்க் எனப்படும் முகக் கவசம் அணிவதால் வைரஸ் கிருமியுள்ள காற்றை நாம் சுவாசிப்பதிலிருந்து தடுக்கப்படும்.

இதனால் பல்வேறு நாடுகளில் முகக் கவசத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் முகக் கவசத்தின் விலையும் அதிகரித்துவிட்டது. இதனால் முகக் கவசம் வாங்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

ஒரு நாளைக்கு ஒரு முகக் கவசம் என பயன்படுத்துவதால் அதன் தேவை தற்போது அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க 7 நாட்கள் வரை பயன்படுத்தக் கூடிய நானோ சில்வர் முகக் கவசங்களை ஜூஹாயை சேர்ந்த அன்ஸின் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த கவசத்தை அணியும் போது அதிலுள்ள நானோ சில்வர் துகள்கள் வெளியிடும் அயனிகளால் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் கொல்லப்படுவதாக அன்ஸின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவன அதிகாரி கூறுகையில் தற்போது நாங்கள் இரு முகக் கவசங்களை மட்டும் இறக்குமதி செய்கிறோம். ஏப்ரல் அல்லது மே மாதம் இவை பரவலாக கிடைக்கும்.

அந்த நேரம் இது போன்ற சூழல் நிலவாமல் கொரோனா நோய் கட்டுக்குள் வந்து விடும் என கருதுகிறோம். ஹாங்காங்கில் உள்ள முக்கிய நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் நானோ சில்வர் மாஸ்க் பாக்டீரியாவை கொல்லும் தன்மை கொண்டது என்றனர்.

அதோடு மாஸ்கில் தண்ணீரை உறிஞ்சும்படியாக மூச்சுவிடும்போது ஈரப்பதமான காற்று கிடைக்கவும் புதிய தொழில்நுட்பத்தை புகுத்தி வருகிறோம். 8 மணி நேர பயன்பாட்டிற்கு பிறகு இந்த மாஸ்கை சோதனை செய்ததில் மற்ற மாஸ்க்களை காட்டிலும் மிகவும் குறைவான கிருமிகளே காணப்படுகின்றன.

2003 ஆம் ஆண்டு சார்ஸ் நோய் வரும் போதும் இது போல் மாஸ்க் தயாரிக்க முயற்சித்தோம். ஆனால் உள்ளூர் அதிகாரிகளின் ஆதரவுடன் தற்போதுதான் அந்த பணி முடிவடைந்துள்ளது. மாஸ்கை போடும் போது சேதாரமோ கிழிந்திருத்தலோ கூடாது.

நீங்கள் பயன்படுத்தாத நேரத்தில் மாஸ்க்களை உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.