கொரோனா தொற்றுடன் பொது இடத்தில குளித்தவரை சுட்டுக்கொன்ற வடகொரியா

14
14

வடகொரியாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை அந்த நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் செய்துவருகிறார். அது மிக மோசமான அளவுக்கு சென்று கொண்டிருப்பதாக அங்குள்ள ஊடகங்களில் வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியது அனைவரும் அறிந்ததுதான். எனவே சீனா உள்ளிட்ட வைரஸ் பாதித்த நாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்கு வருவோரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறது வடகொரியா.

இப்படித்தான் ஒரு, அரசு வணிக அலுவலர் ஒருவரையும் தனிமைப்படுத்தி கண்காணித்துக் கொண்டு இருந்துள்ளது அந்த நாட்டு அரசு. ஆனால் அவர் முன்னறிவிப்பு இன்றி வெளியில், சென்றதாகவும், அங்கே பொதுமக்கள் கூட கூடிய இடத்தில் தண்ணீரில் குளித்ததாகவும் கூறப்படுகிறது

இதை அறிந்து அதிபரின் கவனத்திற்கு இந்த சம்பவம் கொண்டு செல்லப்பட்டதாகவும்., அதிகாரிகள் உடனே அவரை கைது செய்து சுட்டுக் கொன்று விட்டதாகவும் Dong-a Ilbo மற்றும் டெய்லி மெயில் ஆகிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கு ராணுவ கட்டுக்கோப்புடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று ஏற்கனவே கிம் ஜாங் உன் அறிவித்து உள்ளார். அதன் ஒரு பகுதியாக இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.