கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் டென்மார்க் பள்ளிகளை மீண்டும் திறந்துள்ளது!

School Nishanth Krish pic 3.2
School Nishanth Krish pic 3.2

கொரோனா பரவுவதை தடுக்க எல்லைகளை மூடுவது, நீடித்த தனிமைப்படுத்தல்கள் மற்றும் சமூக இடைவெளிகளை அறிமுகப்படுத்துவது என உலக நாடுகள் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகிறது.

அந்த வரிசையில் மார்ச் 12ம் திகதி முதல் கிட்டதட்ட ஒரு மாத காலம் மூடப்பட்டு கிடக்கும் பள்ளிகளை மீண்டும் திறக்கத் தொடங்கியுள்ளது டென்மார்க்.

கொரோனாவுக்கு மத்தியில் ஐரோப்பாவில் பள்ளிகளை திறக்கும் முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது டென்மார்க்.

நர்சரிகள், மழலையர் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், டென்மார்க்கின் நகராட்சிகளில் பாதி மற்றும் கோபன்ஹேகனின் சுமார் 35 சதவீத பள்ளிகளில் மட்டுமே வகுப்புகள் மீண்டும் தொடங்குகின்றன.

ஏனென்றால் மற்ற நகராட்சிகளில் இன்னும் நடைமுறையில் உள்ள சுகாதார நெறிமுறைகளை சரிசெய்ய அதிக நேரம் கோரியுள்ளனர்.

டென்மார்க்கில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஏப்ரல் 20க்குள் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.