கொரோனாவை எதிர்த்து போராடும் தாதிய தம்பதி ; நெகிழ வைக்கும் சேவை

63
63

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தாதிய தம்பதி ஒன்று கொரோனா ஒழிப்புப் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர்.

இருவரும் இணைந்து சேவையாற்றி வருவது பலரையும் வியப்படைய வைத்துள்ளது.

புளோரிடாவை சேர்ந்தவர்கள் மைன்டி பிராக் (38) மற்றும் பென் கேயர் (45). இவர்கள் இருவரும் அங்குள்ள நர்ஸிங் கல்லூரியில் மயக்க மருந்தியல் பிரிவில் 2007-ஆம் ஆண்டு படித்தனர்.

இருவரும் கல்லூரியில் ஏ.பி.சி.டி வரிசைபடியே உட்கார வைக்கப்பட்டதால் பிராக்கிற்கு அடுத்து கேயர் அமர்ந்திருந்தார். அப்போது இருவரும் காதலித்து 2015-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

அவர்கள் தற்போது டாம்பாவில் உள்ள மருத்துவமனையில் சுகாதார பணியாளர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

இருவரும் இணைந்து கொரோனாவுக்கு எதிராக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பணி ஓய்வின் போது இவர்கள் இருவரும் சந்தித்து கொள்ளும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

கொரோனா வார்டில் பணியாற்றுவதால் பாதுகாப்பு கவசங்களுடன் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளும் காட்சியில் எத்தனை காதல் ரசம் சொட்டுகிறது.

இதுகுறித்து கேயர் கூறுகையில் நாம் அனைவரும் தற்போது ஒரே விஷயத்தை நோக்கி செல்கிறோம். இது காதல் மற்றும் நம்பிக்கையின் சின்னமாகும் என்றார்.

இதுகுறித்து பிராக் கூறுகையில் இதில் என்ன முக்கியம் என்றால் நாங்கள் எப்போதும் ஒற்றுமையாக இருப்போம்.

ஒரே இடத்தில் வேலை பார்க்கிறோம். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்போம். இதை நானும் பென்னும் மட்டும் செய்யவில்லை. மனித இனமே செய்கிறது என்றார் பிராக்.

இருவருக்கும் கோவிட் 19 தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ள பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கோவிட் 19 பாதித்தவர்கள், அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு வாயில் குழாயை செலுத்தி அவர்களை சுவாசிக்க செய்வர்.

கொரோனா பாதிப்பு அந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், நர்ஸுகளுக்கு அதிக வாய்ப்பிருக்கும் நிலையில் தம்பதி இருவரும் சேர்ந்து இந்த ஆபத்தான பணியில் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.