வுஹான் மாகாணத்தில் உயிரிழந்தவர்களின் உண்மை நிலவரம்!

corona 2
corona 2

வுஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முன்னர் அறிவிக்கப்பட்டதை விட 50 வீதம் அதிகம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக 2579 பேரே உயிரிழந்தனர் என தெரிவித்திருந்த அதிகாரிகள் இன்று மேலும் 1290பேரை உயிரிழந்தவர்களின் பட்டியலில் சேர்த்துள்ளனர். இதன் காரணமாக வுஹானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3869 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய ஆரம்பநாட்களில் வைத்தியசாலைகளில் நிலவிய பற்றாக்குறைகள் காரணமாக சில மருத்துவமனைகள் சீனாவின் நோய்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையத்துடன் உரிய தொடர்புகளை ஏற்படுத்தவில்லை என சீனாவின் அரச ஒலிபரப்புஸ்தாபனமான சிஜிடின் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சரியாக மதிப்பிடுவதில் தவறுகள் ஏற்பட்டுள்ளன என அரச ஊடகம் கூறியுள்ளது.

சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டதைவித அதிகமாகயிருக்கலாம் என்ற கருத்து காணப்பட்ட நிலையிலேயே இன்று (17) சீனா இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

உயிரிழந்த குடும்பத்தவர்களின் அஸ்தியை பெறுவதற்காகவும், அவர்களிற்கு இறுதிச்சடங்குகளை நடத்துவதற்காகவும் நீண்ட வரிசையில் பெருமளவானவர்கள் காத்திருப்பதை தொடர்ந்தே பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாகயிருக்கலாம் என்ற கருத்து அதிகரிக்க தொடங்கியது.