ஊரடங்கை நீடிக்க ஜப்பான் முடிவு

5 y
5 y

ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறையாததால், நடைமுறையில் உள்ள ஊரடங்கை நீடிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனினும், இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஜப்பான், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு, மே 7ஆம் திகதி இயல்பு நிலைக்கு வருவது கடினமானது. வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடத் தயாராக வேண்டும்.

ஊரடங்கை நீடிப்பது குறித்து நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறேன். மாகாண அரசுகளும் இதற்கு தயாராக வேண்டும். ஊரடங்கை நீடிப்பது குறித்து 6ஆம் திகதிக்கு முன்னதாக அறிவிக்கப்படும்’ என கூறினார்.