ரஷ்யாவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா

6 uad 1
6 uad 1

ரஷ்யாவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு, ஒரே நாளில் 7,933பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து ரஷ்யாவில் பதிவான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கையாக இது பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 114,431ஆக அதிகரித்துள்ளது.