வௌவால்களை ஆராய்ந்த “பேட் வுமனை விசாரிக்க வேண்டும்!

5 jk
5 jk

பல வருடங்களாக வௌவால்களில் ஆராய்ச்சி செய்து வந்த சீனாவை சேர்ந்த “பேட் வுமன்” என்று அழைக்கப்படும் ஷி ஷெங்கிலி தற்போது உலகம் முழுக்க கவனம் ஈர்த்து இருக்கிறார். கொரோனா வைரஸ் தொடர்பாக இவரை விசாரணை செய்ய வேண்டும் என்று சில நாடுகள் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளது.

கொரோனா வைரஸ் தோன்றி இத்தனை நாட்கள் ஆன பின்பும் கூட அதன் தோற்றம் குறித்த கேள்விகள், சந்தேகங்களுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. இந்த கொரோனா வைரஸ் வௌவால்களில் இருந்து பரவி இருக்கலாம், வௌவால் மூலம் செய்யப்பட்ட உணவு மூலம் மனிதருக்கு சென்று இருக்கலாம் என்று சில மருத்துவர்கள் கூறுகிறார்கள். இன்னொரு பக்கம் இந்த வைரஸ் எறும்பு திண்ணியிடம் இருந்து மனிதருக்கு பரவி இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். அதே சமயம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த வைரஸ் வுஹன் வைராலஜி ஆராய்ச்சி மையத்தில் இருந்து கசிந்து இருக்கலாம் என்று சந்தேகம் கொள்கிறார்கள்.

வுஹன் ஆராய்ச்சி மையத்தில் இருந்து இந்த வைரஸ் கசிந்து இருக்க வாய்ப்புள்ளது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது. இந்த நிலையில்தான் உலகம் முழுக்க தற்போது வுஹன் வைரலாஜி ஆராய்ச்சி மையத்தின் மூத்த பெண் ஆராய்ச்சியாளர் ஷி ஷெங்கிலி மீது கவனம் திரும்பி உள்ளது. உலக நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர் இவரை பேட் வுமன் என்று அழைக்கிறார்கள். அதாவது இவரை வௌவால் பெண்மணி என்று சிறப்பு பெயருடன் அழைக்கிறார்கள்.

சீனாவை சேர்ந்த ஷி ஷெங்கிலி வுஹன் வைரலாஜி மையத்தில் 18 வருடங்களாக கொரோனா குடும்ப வைரஸ் குறித்தும் வௌவால்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்து வருகிறார். அதுவும் இவராக குகைகளுக்கு சென்று வௌவால்களை பிடித்து வந்து அதில் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து இருக்கிறார். இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று அங்கிருந்து வௌவால்களை சேகரித்து பல்வேறு ஆராய்ச்சிகளை வுஹன் ஆராய்ச்சி மையத்தில் ஷி ஷெங்கிலி செய்துள்ளார்.

கொரோனா குடும்பத்தை சேர்ந்த சார்ஸ் வைரஸை ஆராய்ச்சி செய்ய தொடங்கியதில் இருந்து இவருக்கு வௌவால் மீதான ஆசை அதிகரித்து இருக்கிறார். உடல் முழுக்க வைரஸ் கிருமிகள் இருந்தும் கூட வௌவால் மட்டும் எப்படி பாதிக்காமல் இருக்கிறது. வௌவாலின் எந்த விதமான எதிர்ப்பு சக்தி அதை காக்கிறது என்று இப்போதும் அவர் ஆராய்ச்சி செய்து வருகிறார். 2002ல் இருந்து இவர் சார்ஸ் வைரஸ் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்.

கொரோனா வைரஸ் கசிந்ததாக நம்ப கூடிய வுஹன் ஆராய்ச்சி மையத்தின் பி4 சோதனை கூடத்தில்தான் இவரும் பணியாற்றி உள்ளார். ஷி ஷெங்கிலி 2013ல் கண்டுபிடித்த வௌவால் ஒன்றின் உடலில் இருந்த வைரஸ் தற்போது உலகில் பரவும் கொரோனா வைரஸோடு 96.2 ஒத்து போவதாக அவரே தெரிவித்துள்ளார். இதனால் வௌவாலிடம் இருந்துதான் கொரோனா பரவி இருக்கும் என்று அடித்துக் கூறுகிறார். ஆனால் இவர் மீதே தற்போது உலக நாடுகள் சந்தேகம் கொள்ள தொடங்கி உள்ளது.

இவர் செய்த வௌவால் ஆராய்ச்சி மூலம் கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டு இருக்கலாம். அந்த வைரஸ் சோதனை கூடத்தில் இருந்து கசிந்து இருக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ஆதரவான ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவில் தெரிவிக்க தொடங்கி உள்ளனர். இந்த ஷி ஷெங்கிலியை விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர். ஷி ஷெங்கிலிக்கு உண்மைகள் தெரிய வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

ஒரு பக்கம் உலக நாடுகள் இவரை பிடித்து விசாரிக்க முயன்று கொண்டு இருக்கிறது. ஆனால் இன்னொரு பக்கம் சீனாவும் இவர் மீது கோபத்தில் இருக்கிறது. சீனா கொரோனா வைரஸ் குறித்து தொடக்க காலத்தில் உண்மைகளை மறைத்துவிட்டது என்று ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையில் வுஹன் சோதனை கூடத்தில் இருந்து கசிந்த சில கோப்புகளை பயன்படுத்தி இருந்தது. இந்த கோப்புகள் எப்படி கசிந்தது என்று சீனா விசாரித்து வருகிறது.

15 பக்கம் கொண்ட அந்த கோப்பு ஷி ஷெங்கிலி இருந்த அதே சோதனை கூடத்தில் இருந்துதான் கசிந்து இருக்கிறது. இதனால் ஷி ஷெங்கிலி இதை கசியவிட்டு இருப்பாரோ என்று சீனாவில் சிலர் சந்தேகம் கொள்கிறார்கள். இதனால் ஷி ஷெங்கிலி தற்போது எங்கும் செல்லாமல் வீட்டில் இருக்கிறார். இவரை கடத்திவிட்டதாக சீனாவில் செய்திகள் பரவியது. ஆனால் ஷி ஷெங்கிலி அதை மறுத்து இருக்கிறார். என்னை யாரும் கடத்தவில்லை என்று ஷி ஷெங்கிலி கூறியுள்ளார்.

ஷி ஷெங்கிலிதான் சீனாவில் கொரோனா வைரஸ் பரவுகிறது என்பதை உறுதிப்படுத்தினார். மருத்துவர்களின் புகாரை தொடர்ந்து இவர்தான் வைரஸ் பரவலை ஆராய்ச்சி மூலம் உறுதிப்படுத்தினார். அதனால் கொரோனா வைரஸ் குறித்து கண்டிப்பாக இவருக்கு அதிகம் தெரிந்து இருக்கும். கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பதில் கண்டிப்பாக ஷி ஷெங்கிலி பெரிய அளவில் உதவியாக இருப்பார் என்று கூறுகிறார்கள். இதனால் உலகமே தற்போது ஷி ஷெங்கிலியை உற்றுநோக்க தொடங்கி உள்ளது.