கொரோனாவை அழிக்கும் பிறபொருளெதிரியை இஸ்ரேல் உருவாக்கியுள்ளதாக அறிவிப்பு!

7 oad 1
7 oad 1

கொரோனா வைரசை அழிக்கும் பிறபொருளெதிரியை (Antibody) உருவாக்கியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் (ஐ.ஐ.பி.ஆர்) இதற்கான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் நப்தாலி பென்னட் கூறுகையில், ‘இது கொரோனா தொற்றுநோய்க்கு சாத்தியமான சிகிச்சையை நோக்கிய குறிப்பிடத்தக்க முன்னேற்றம்.

பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சிக்கான இஸ்ரேல் நிறுவனமான (ஐ.ஐ.பி.ஆர்)இல் உருவாக்கப்பட்ட மோனோக்ளோனல் நியூட்ராலைசிங் பிறபொருளெதிரி (Antibody) நோயாளிகளின் உடல்களுக்குள் நோயை உருவாக்கும் கொரோனா வைரஸை அழிக்கும்’ என கூறினார்.

மேலும் இதுகுறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் இயக்குனர் ஷ்முவேல் ஷாபிரா கூறுகையில், ‘பிறபொருளெதிரி செய்முறை காப்புரிமை பெறுகிறது. அதன் பிறகு சர்வதேச உற்பத்தியாளர் அதை பெருமளவில் உற்பத்தி செய்ய முற்படுவார்’ என கூறினார்.