ஊரடங்கை நீடித்தது நேபாளம்!

5 hh 0
5 hh 0

நேபாளத்தில் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவும் அச்சம் எழுந்துள்ளதால், ஊரடங்கை அந்நாட்டு அரசு நீடித்துள்ளது.

நாளையுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், இன்று பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற விஷேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதன்படி, ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிக்கப்படும் என நேபாள அரசு அறிவித்துள்ளது.

நேபாளத்தில் முதலில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது 2 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

அதன்பின்னர் படிப்படியாக அதிகரித்து தற்போது 82 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த வாரம் மட்டும் 23பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 66பேர் சிகிச்சை பெற்று வருவதோடு, 16பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்னனர். உயிழப்பு எதுவும் பதிவாகவில்லை.