ஊரடங்கை முற்றாக தளர்த்துமா ஜேர்மனி?

th 1
th 1

எதிர்வரும் ஒரு சில தினங்களில் ஜேர்மனியில் ஊரடங்கினை முற்றிலும் நீக்க தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக ஜேர்மனியின் பிரதமர் அஞ்ஜலா மேர்க்கெல் மாகாணங்களின் கவர்னர்களுடன் கலந்தாலோசனையில் ஈடுபட்டிருந்தார்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துதல், தொழில் நடவடிக்கைகளை மீட்டெடுத்தல் போன்றவை குறித்து ஆராயப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் அடுத்த சில நாட்களில் கடைகள், பாடசாலைகள், ஹோட்டல்கள், விடுதிகள் உள்ளிட்டவற்றை திறக்க திட்டமிட்டுள்ளோம் என மேர்கெல் கூறியுள்ளார்.

தற்போது நாட்டில் கொரோனா தொற்று குறைந்திருந்தாலும், தொடர்ந்து சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும். என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் ஜேர்மனியில் தேவாலயங்கள், விளையாட்டு மைதானங்கள், நுதனசாலைகளை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஊரடங்கினை முற்றாக நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனியில் கொரோனா தொற்றால் 169,430 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 7392 பேர் உயிரிழந்துள்ளனர். 141 700 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இத்துடன் ஜேர்மனியில் நேற்று (7) மாத்திரம் 1268 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், 117 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.