ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ஒருவர் பலி!

th 4
th 4

கொரோனா அச்சத்தில் உள்ளநிலையில் ஈரானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 7 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்து சம்பவம் தொடர்பில் ஈரான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் வடக்குப் பகுதியில் உள்ள தமாவாண்ட் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலநடுக்கத்திற்கு தற்போதுவரை ஒருவர் பலியானதாகவும் 7 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

குறித்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட முழுமையான பாதிப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா தொற்றால் ஈரான் அதிகமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஈரானில் பெப்ரவரி மாதம் பரவத் தொடங்கி கொரோனா கடந்த மார்ச் மாதம் தீவிரமடைந்தது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று குறைந்த நிலையில், தற்போது மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது அங்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரானில் சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 6,486 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.