இணைய ஊடுருவிகள் குறிவைக்கும் ஆராய்ச்சி நிறுவனங்கள்

51
51

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் நிறுவனங்களை சீனாவுடன் தொடர்பு கொண்டிருக்கும் இணைய ஊடுருவிகள் குறிவைப்பதாக அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆனால், அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான எஃப்.பி.ஐ. இன் கருத்தை சீனா முற்றுமுழுதாக மறுத்துள்ளது.

அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.மற்றும் மற்றொரு பாதுகாப்பு அமைப்பான சிஸாவும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பூசி குறித்து ஆராய்ந்து வரும் அமெரிக்க குழுக்களின் தரவுகளை திருடுவதற்கு சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

கொவிட்-19 பெருந்தொற்று தொடர்பாக ஆராய்ச்சி நடத்தும் நிறுவனங்கள், இணைய ஊடுருவிகளின் இலக்காக இருப்பதால், அவை விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.