ரஷ்ய பிரதமர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார்!

 பிரதமர்
பிரதமர்

உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றில் சிக்கி பூரண குணமடைந்த ரஷ்ய பிரதமர் மிகாய்ல் மிஷுஸ்டின் கடமைக்கு திரும்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளாகியமையால், பணியில் இருந்து தற்காலிமாக ஒதுங்கி இருக்கப் போவதாக பிரதமர் மிகாய்ல் மிஷுஸ்டின் அறிவித்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இதனால் அந்நாட்டு துணை பிரதமர் ஆண்ட்ரே பெலோசாவ், பிரதமரின் பணிகளை தற்காலிகமாக மேற்கொண்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்றினால் ரஷ்யாவில் (03) இலட்சத்து (8,705) பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்புக்குள்ளான நாடாக ரஷ்யா உள்ளது.

இதேவேளை ரஷ்யாவில் கொரேனா தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை (02) ஆயிரத்து (972) ஆக காணப்படுவதோடு (85) ஆயிரத்து (392) பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

பெரும்பான்மையான நோய்த்தொற்றுகள் ரஷ்ய தலைநகரில் மையப்படுத்தப்படுத்தியே இனங்காணப்படுகின்றது. இதனால் மே மாத இறுதி வரை ரஷ்யா மூடுவதை நீட்டித்துள்ளது.

மேலும் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு கடைகளுக்கும் செல்லப்பிராணிகளான நாய்களை வெளியில் அழைத்து செல்லவும் அல்லது அத்தியாவசிய வேலைகளுக்கு அனுமதிப்பத்திரத்துடன் பயணிக்கவும் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.