பாக்கிஸ்தான் அரசியல் தலைவர்கள் மீது அமெரிக்க பெண் பாலியல் குற்றச்சாட்டு

i3 28
i3 28

பாக்கிஸ்தான் முன்னாள் அமைச்சர் ரஹ்மான் மாலிக், தன்னை பலாத்காரம் செய்ததாக சிந்தியா டி.ரிச்சி என்ற அமெரிக்க பெண் சாகச கலைஞர் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல சாகச கலைஞர் மற்றும் வலைப்பதிவாளர் சிந்தியா டி.ரிச்சி. பாக்கிஸ்தானில் முந்தைய பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சி நடந்த போது பிரதமர் அலுவலகம், அதிபர் மாளிகை துவங்கி , அப்போதைய அமைச்சர்கள் ஆகியோருக்கு மிகவும் நெருக்கமான பிரபலமாக வலம் வந்துள்ளார் .

இந்நிலையில் சமூக வலைதளம் வாயிலாக கூறியதாவது: 2011-ம் ஆண்டு பாக்கிஸ்தானில் பதுங்கியிருந்த அல்கொய்தா பயங்கரவாதி ஒசாமா பின்லேடன், அமெரிக்க படைகளால் என்கவுன்டர் செய்யப்பட்ட சம்பவம் நடந்த காலகட்டத்தில், எனது விசா சம்பந்தமாக அப்போதைய முன்னாள் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்கை அவரது அலுவலகத்தில் சந்திக்க சென்றேன்.

அப்போது என்னை அவர் பலாத்காரம் செய்தார். அப்போதைய பாக்கிஸ்தான் பிரதமர் யுசுப் ராசா கிலானி, முன்னாள் அமைச்சர் மக்தும் ஷகாபுதீன் உள்ளிட்ட சில முன்னாள் அமைச்சர்களும் தனக்கு பாலியல் தொல்லை தந்தனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்றும் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். அதில் பாக்கிஸ்தான் இப்போதைய பிரதமர் இம்ரான்கான் , தன்னை பல முறை படுக்கைக்கு வருமாறு அழைத்தார் என புகார் கூறியுள்ளார். சிந்தியா டி.ரிச்சியின் பாலியல் குற்றச்சாட்டு பாக்கிஸ்தானில் அரசியலில் புயலை கிளப்பி வருகிறது.