இலங்கைக்கு உதவ சீனா தயார்!

.jpg
.jpg

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பின் தாக்கத்தை குறைக்கும் வகையில் சீனாவினால் வழங்கப்படும் முதற்கட்ட நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என இலங்கையில் உள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பில் இரு தரப்பு பேச்சுவார்தைகள் இடம்பெற்று வருவதாக குறித்த தூதரக பேச்சாளர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி இடையே சமீபத்தில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது இது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகவும் குறித்த பேச்சாளர் தெரிவித்தார்.

கொவிட் 19 தாக்கத்திற்கு உள்ளான மேலும் அபிவிருத்தி அடைந்துவரும் (77) நாடுகளுக்கும் நிவாரண தொகையை வழங்க சீனா இணக்கம் வெளியிட்டனது.

இருப்பினும் குறித்த நாடுகள் பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்படவில்லை என சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையுடனான நெருக்கமான பொருளாதார ஒத்துழைப்பின் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப உதவ தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.