ஜூலை 6 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பம் – கல்வி அமைச்சு

maxresdefault 1
maxresdefault 1

எதிர்வரும் ஜூன் 29 ஆம் திகதியுடன் அனைத்து பாடசாலைகளின் விடுமுறைகள் நிறைவுக்கு வருவதாக கல்வி அமைச்சர் டளஸ் அளகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை 4 கட்டங்களாக மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் அறிவித்துள்ளார்.

முதல் கட்டமாக ஜுன் மாதம் 29ஆம் திகதி முதல் ஜுலை மாதம் 3ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி ஊழியர்களே பாடசாலைக்கு வர வேண்டும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, எதிர்வரும் ஜூலை 6 ஆம் திகதி முதல் பாடசாலை திறக்கப்பட்டு மூன்று கட்டங்களாக கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் ஜூலை 06 ஆம் திகதி தரம் 5 தரம் 11 மற்றும் தரம் 13 ஆகிய மாணவர்களுக்காக பாடசாலை 2ஆம் கட்டமாக திறக்கப்பட உள்ளது.

மூன்றாம் கட்டமாக ஜூலை மாதம் 20 ஆம் திகதி தரம்10 மற்றும் தரம் 12 ஆம் தர மாணவர்களுக்காக பாடசாலை திறக்கப்படவுள்ளன.

அதேபோல் நான்காம் கட்டமாக முதலாம் மற்றும் இரண்டாம் தரங்களை தவிர்ந்த 3, 4, 6, 7, 8,மற்றும் 9 தர மாணவர்களுக்காக பாடசாலை ஜுலை மாதம் 27 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

இதேவேளை 2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி உயர்தர பரீட்சைகள் செப்டம்பர் 7 ஆம் திகதி முதல் அக்டோபர் 2 ஆம் திகதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி நடைபெறும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.