அறிகுறி இல்லாதவர்களிடமிருந்து கொரோனா அரிதாக பரவுகிறது: உலக சுகாதார அமைப்பு

i3 7 4
i3 7 4

அறிகுறி இல்லாதவர்களிடமிருந்து கொரோனா அரிதாகவே பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரி மரியா வான் கொக்கோவ், ‘ அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை ஆய்வு செய்ததில் தொற்று பரவியதாக கண்டறியப்படவில்லை என்றும், அப்படி பரவிய நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே நடந்துள்ளது. அறிகுறி இல்லாதவர்கள் மூலம் ஏன் பரவுவதில்லை என்பதை விளக்க தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.


நோய் அறிகுறி உள்ளவர்கள் இருமும் போதோ அல்லது தும்மும் போது வெளிப்படும் சளித் திவலைகள் மூலம் வைரஸ் பரவுவதால் அவர்களுடைய தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தினால் தான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும்’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.