தென்கொரியாவின் கோரிக்கையை மறுத்த வடகொரியா!

download 10
download 10

தென்கொரியா மற்றும் வடகொரியா ஆகிய இருநாட்டு எல்லைப் பிரச்சினையை தீர்ப்பதற்கு தென்கொரியாவின் மறு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வடகொரியா நிராகரித்துள்ளது.

வடகொரியா நாட்டு எல்லைப் பகுதிகளில் தமது இராணுவ வீரர்களை நிறுத்தவுள்ளதாக வடகொரியா நேற்றைய தினம் அறிவித்தது.

வடகொரியாவுக்குள் தென் கொரியாவில் இருந்து அரசியல் சித்தாந்தங்களின் பல்வேறு வடிவிலான வருகையை தடுப்பதற்காகவே குறித்த நடவடிக்கையை கைக்கொண்டுள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ-ஜாங், வடகொரியா தங்களது இராணுவத்தை மாத்திரமன்றி போர் ஆயுதங்களையும் எல்லையில் இருக்கும் தீயணைப்பு மண்டலத்தில் நிறுவும் என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கொரோனா வைரஸ் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான வேற்றுமைகள் நீக்கப்பட வேண்டும் என்று தென் கொரியா அறிவித்துள்ளது.