மருத்துவமனையில் நடந்த கோர விபத்து

ambulance 3
ambulance 3

ஈரானில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் டாங்க் வெடித்து சிதறிய விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

தெஹ்ரானுக்கு அருகில் தைரிஷ் சதுர்க்கம் பகுதியில் அமைந்துள்ள Sina Athar மருத்துவமனையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் ஆக்சிஜன் டாங்கில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் அதிகளவு பெண்களே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலானோர் மேல் தளங்களில் இருந்ததால் பலி எண்ணிக்கை அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் மருத்துவமனையில் போதுமான அளவு ஆக்சிஜன் டாங்குகள் இருந்ததால் அடுத்தடுத்த வெடிவிபத்து தொடர்ந்ததாகவும் தெரிகிறது.

இதனால் ஏற்பட்ட கடும் புகையால் பலர் பாதிக்கப்பட்டதாக மீட்புப்பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலர் காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.