கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிப்பு -இஸ்ரேல் மீண்டும் முடக்கம்

Benjamin Netanyahu3
Benjamin Netanyahu3

கொரோனா வைரஸின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ள நிலையில் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் முடக்க கட்டுப்பாடுகளை இஸ்ரேல் மீண்டும் விதித்துள்ளது.

அதன்படி மதுபான நிலையங்கள், இரவு நேர விடுதிகள், ஜிம்கள் மற்றும் பொது அரங்குகள் அனைத்தும் இன்று முதல் மூடப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் முதல் நாளாந்தம் சுமார் 1000 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுவரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தொற்றுநோய் பரவி வருகிறது, நாளுக்கு நாள் பலர் நோய்த்தொற்றுக்கு உள்ளாகின்றனர்.

நாடு தழுவிய முடக்கம் அவசியம் என்பதற்கு முன்னர் இஸ்ரேல் தனது போக்கை மாற்றியமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.