பப்ஜி கேம் மோகத்தால் பணத்தை விரயமாக்கிய சிறுவன்

hqdefault 1
hqdefault 1

உலகளவில் உள்ள இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் விளையாடும் கேம், பப்ஜி. பல விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளை சந்தித்தாலும், தற்பொழுது வரை இந்த விளையாட்டை பலரும் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் பஞ்சாபை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன், பப்ஜி கேமில் உள்ள துப்பாக்கி ஸ்கின், உடைகள், உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு தனது தாத்தாவிடம் இருந்து ரூ.2 லட்சம் செலவழித்து தெரியவந்தது.

கடந்த ஜனவரி மாதம் பப்ஜி விளையாட தொடங்கிய அந்த சிறுவன், அந்த விளையாட்டுக்கு அடிமையானான்.

இதனையடுத்து, அந்த விளையாட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு பணத்தை செலவழிக்க ஆரம்பித்தான். அதற்கு தனது தாத்தா பெயரிலே கணக்கை உருவாக்கி அது மூலமாக பணம் செலுத்தி வந்தார். அவரின் வங்கிக்கணக்கை சோதனை செய்த அந்த சிறுவனின் பெற்றோர்கள் பணம் எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பணம் எடுக்கப்பட்டதை அந்த சிறுவனிடம் கேட்டபோது, அவன் ஒப்புக்கொண்டான். அதில் ரூ.2 லட்சம் வரை செலவு செய்ததாகவும் கூறினான்.

அத்துடன் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ரூ.55ஆயிரம் வரை செலவு செய்ததாகவும் அந்த சிறுவன் கூறினான். இதேவேளை இதற்கு முன்னர் பஞ்சாபை சேர்ந்த மற்றொரு 17 வயது சிறுவன், பப்ஜி விளையாடுவதற்காக 16 லட்ச ருபாய் செலவு செய்தது, குறிப்பிடத்தக்கது.