கிரேன் வீழ்ந்ததில் பெண் ஒருவர் மரணம்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 6 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 6 1

லண்டன் போவ் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றின் நிர்மாணப்பணிகளில் பயன்படுத்தப்பட்டிருந்த கிரேன் வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் 20 மீற்றர் உயரமான கிரேன் ஒன்று வீழ்ந்ததாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.இவ்விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் முதலாம் மாடியில் உள்ள வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.விபத்தில் காயமடைந்த நால்வரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.