கேரளாவில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு!

.jpg
.jpg

கேரள மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் நேற்று ஒரே நாளில் 416 வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும்,  கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தீவிர ஊரடங்கு அமுல்படுத்தப்படும் எனவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளமாநிலத்தில் மொத்தமாக 6 ஆயிரத்து 951 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், முவ்வாயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

குறித்த மாநிலத்தில்  தற்போது நோய்ப் பரவல் மிக முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளதாகவும் சமூகப் பரவல் என்ற அபாய கட்டத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாகவும் அம்மாநில முதலமைச்சர்  பினராயி விஜயன் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.