முதன்முதலாக இராணுவ செயற்கைக்கோளை ஏவியது தென்கொரியா: உலக நாடுகளில் 10ஆவது இடம்!

South Korea launches first military satellite

தென்கொரியாவின் முதலாவது இராணுவ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கேப் கனவெரல் (Cape Canaveral Air Force Station) வான்படை மையத்திலிருந்து குறித்த அனாசிஸ்-2 (ANASIS-II) செயற்கை்ககோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

அணு ஆயுத அண்டை நாடான வட கொரியாவுக்கு எதிராக தனது பாதுகாப்புத் திறன்களை அதகரித்துக்கொள்ளும் விதமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இராணுவத்திற்கு மட்டுமே தகவல் தொடர்பு செயற்கைக்கோளை வைத்திருக்கும் உலகின் 10 ஆவது நாடாக தென்கொரியா பதிவாகியுள்ளது. இந்த செயற்கைக் கோள் நிரந்தர மற்றும் பாதுகாப்பான இராணுவ தகவல்தொடர்புகளை வழங்கவுள்ளது.

இரண்டு வாரங்களில் இந்த செயற்கைக்கோள் அதன் சுற்றுப்பாதை நிலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன் இது சோதனைக்குப் பின்னர் வரும் ஒக்டோபரில் தென் கொரியாவின் இராணுவம் கட்டமைப்புக்குள் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள் “தென் கொரிய இராணுவத்தின் சுயாதீன செயற்பாட்டு திறன்களை மேம்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.