ராஜஸ்தான் அரசியல்: பிரதமர் இல்லம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் – அசோக் கெலாட் மிரட்டல்

Rajasthan Chief Minister Ashok Gehlot to meet Governor
Rajasthan Chief Minister Ashok Gehlot to meet Governor

ராஜஸ்தான் அரசியலில் உச்சபட்ச பரபரப்பு நிலவி வரும் நிலையில், தேவைப்பட்டால் பிரதமர் இல்லத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என அம்மாநிலமுதல் மந்திரி அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையில் மோதல் உருவாகியுள்ளது. துணை முதல்வர், காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டதுடன், சபாநாயகர் பைலட் உள்பட 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்களுக்கு கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக நோட்டீஸ் அனுப்பினார்.

சபாநாயகரின் நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை நாடினார். இதில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு 19 எம்.எல்.ஏ.-க்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

எனினும் தற்போது தன்னிடம் அதிக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதால் ராஜஸ்தான் மாநில சட்டசபையை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும் முயற்சியில் கோலட் இறங்கியுள்ளார்.

இதற்காக மாநில கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை சில முறை சந்தித்த கெலாட் சட்டசபையை உடனடியாக கூட்ட வேண்டும் என வலியுறித்தினார். ஆனால், முதல்மந்திரியின் கோரிக்கையை கவர்னர் தொடர்ந்து தவிர்த்து வருகிறார்.

இந்நிலையில், ஜெய்ப்பூரில் தனியார் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ள தனது ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் அசோக் கெலாட் இன்று ஆலோசனை நடத்தினார். 

இந்த கூட்டத்தில் பேசிய முதல்மந்திரி கெலாட்,’தேவைப்பட்டால் நாம் டெல்லி ராஷ்டிரபதிபவன் சென்று குடியரசுத்தலைவரையும் சந்திப்போம். மேலும், தேவைப்பட்டால் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லம் முன்பு நாம் போராட்டத்திலும் ஈடுபடுவோம்’ என்றார்.

இதற்கிடையில், கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை 4 மணியளவில் சந்திக்க முதல்மந்திரி அசோக் கெலாட் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது. மேலும், இந்த சந்திப்பிற்கு பின்னர் ராஜஸ்தான் மாநில எதிர்க்கட்சி தலைவர் குலேப் சந்திர கட்டாரியா மற்றும் பாஜக தலைவர் சதிஷ் புனியா இருவரும் கவர்னரை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அடுத்தடுத்த இந்த சந்திப்புகளால் ராஜஸ்தான் அரசியலில் உச்சபட்ட பரபரப்பு நிலவி வருகிறது.