உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

file7a5d86nlquv18uumkp2
file7a5d86nlquv18uumkp2

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோர் எண்ணிக்கை 99 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1.61 கோடியை தாண்டியுள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 6.47 இலட்சத்தைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையைில் உலகின் 40 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் இந்த வாரத்தில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் சில நாடுகளில் தீவிர பரவலை எட்டியுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் டெட்ரோஸ் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க, பிரேசில் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மாத்திரமன்றி தற்போது அவுஸ்திரேலியா, ஜப்பான், ஹொங்கொங், பொலிவியா, சூடான், எதியோப்பியா, பல்கேரியா, பெல்ஜியம், உஸ்பெஸ்தான் போன்ற நாடுகளிலும் தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.