டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த அப்துல்கலாம் ஹேஸ்டேக்

Abdul Kalam
Abdul Kalam

சமூக வலைதள பக்கமான டுவிட்டரில் #apjabdulkalam என்கிற ஹேஸ்டேக், இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், சமூக வலைதள பக்கமான டுவிட்டரில் #apjabdulkalam என்கிற ஹேஸ்டேக், இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட பேய்க்கரும்பு என்ற இடத்தில் அப்துல்கலாமின் நினைவிடம் அமைக்கப்பட்டு உள்ளது.

இங்கு வருபவர்கள் கலாமின் வாழ்க்கை வரலாற்றுக் காட்சிக் கூடம், அவர் உருவாக்கிய விண்வெளி சாதனங்கள், அவர் பெற்ற விருதுகள் ஆகியவற்றையும் பார்த்து செல்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் அவருடைய நினைவு தினத்தில், ராமேசுவரத்தில் உள்ள தேசிய நினைவகத்திற்கு அப்துல்கலாம் குடும்பத்தினர் மற்றும் மாவட்ட நிர்வாகம், அரசு அதிகாரிகள், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் சென்று மலர் தூவி மரியாதை செய்வார்கள்.

கலாமின் கனவை நனவாக்கி ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்குவதற்காக இளைஞர்கள், மாணவர்கள் உறுதிமொழியும் எடுத்து கொள்வார்கள்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க கூட்டமாக கூடுவதற்கு அரசு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது. எனவே கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் தலைமையில் குடும்பத்தினர் மற்றும் ஜமாத்தை சேர்ந்தவர்கள் அத்துடன் மாவட்ட நிர்வாகத்தினரும் சென்று மலர் தூவி மரியாதை செய்தனர்.