15 மில்லியன் சிறுவர்களுக்கு எத்தியோப்பியாவில் அம்மை நோய் தடுப்பூசி!

african
african

எத்தியோப்பியாவில் சுமார் 15 மில்லியன் சிறுவர்களுக்கு அம்மை நோய்க்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் எத்தியோப்பியா அலுவலகம் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாடு தழுவிய வகையில் எத்தியோப்பியன் சுகாதார அமைச்சின் தலைமையில் உலக சுகாதார ஸ்தாபனம், யுனிசெஃப், காவி, தடுப்பூசி கூட்டணி மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் ஆதரவுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 முன்னெடுக்கப்பட்ட இந்த தடுப்பூசி போடும் நடவடிக்கையானது ஏப்ரல் மாதத்தில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இடைநிறுத்தப்படும், இம் மாதம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 15 மில்லியன் சிறுவர்களை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் இறுதியாக 14.4 மில்லியன் சிறுவர்களுக்கு தடைப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அந் நாட்டு சுகாதார அமைச்சக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.