உலகளவில் உயிரிழப்பு 6 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது!

60215783 corona economy 4
60215783 corona economy 4

கொரோனா வைரஸ் தொற்றினால் உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ஐரோப்பிய நாடுகளில் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஆண்டின் பிற்பகுதியில் சீனாவில் தோன்றியதில் இருந்து, இந்த வைரஸ் தொற்றினால் மொத்தம் 650,011 பேர் உயிரிழந்துள்ளதோடு, 16,323,558 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் 9,190,345 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.

எ.எப்.பி புள்ளிவிபரங்களின் படி, ஜூலை 9 ஆம் திகதி முதல் 100,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. மேலும் உலகளாவிய ரீதியில் உயிரிழப்பு எண்ணிக்கை இரண்டு மாதங்களில் இரட்டிப்பாகியுள்ளது.