சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் முதல் எதிர்க்கட்சித் தலைவராக இந்திய வம்சாவளி வழக்கறிஞர்!

vikatan 2020 04 a4c02c51 5ce4 4792 9810 4eef5bc767f8 BB 2
vikatan 2020 04 a4c02c51 5ce4 4792 9810 4eef5bc767f8 BB 2

சிங்கப்பூர் பாராளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக எதிர்க்கட்சி தலைவராக இந்திய வம்சாவளி வழக்கறிஞர் பிரீத்தம் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வந்த தேர்தலில் பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான பி.ஏ.பி என்ற கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது. அந்த கட்சி 83 தொகுதிகளில் வெற்றி பெற்று அபாரமாக மீண்டும் வெற்றி பெற்றது.

சிங்கப்பூர் அரசியல் அமைப்பு சட்டப்படி எதிர்க்கட்சிகளை நியமனம் செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்நாட்டின் அரசியல் அமைப்பின்படி எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் குறித்த நிலைப்பாடு எதுவுமில்லை. ஆனால் சமீபத்தில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு எதிர்க்கட்சி தலைவர் பதவி உருவாக்கப்பட்டது.

இந்த பதவியில் தான் தற்போது பிரீதம்சிங் என்ற இந்திய வம்சாவளி வழக்கறிஞர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவரது கட்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு 10 தொகுதிகளை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் முதல் முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருப்பது சிங்கப்பூரில் வாழும் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.