கொரோனாவுக்கு அதிக உயிர்களை பலிகொடுத்த மூன்றாவது நாடாகப் பதிவானது மெக்ஸிக்கோ!

111301724 5edc45ed 3db8 4232 bd28 4115931c9514

கொரோனா தொற்றுக்குள்ளாகி அதிகமானவா்கள் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் மெக்ஸிக்கோ மூன்றாம் இடத்துக்கு சென்றுள்ளது. இதுவரை மூன்றாம் இடத்தில் இருந்த பிரிட்டன் நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1 இலட்சத்து 56 ஆயிரத்து 747 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசிலில் 92 ஆயிரத்து 568 பேர் உயிரிழந்துள்ளனர்.

மெக்ஸிக்கோவில் நேற்று 688 பேர் உயிரிழந்ததையடுத்து, அந்நாட்டில் ஒட்டுமொத்த உயிரிழப்பு 46 ஆயிரத்து 688 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் மூன்றாவது அதிக கொரோனா மரணங்கள் இதுவாகும்.

பிரிட்டனில் கொரோனாவில் 46 ஆயிரத்து 119 பேர் உயிரிழந்துள்ளனர்.

மெக்சிகோவில் இதுரை 4 இலட்சத்து 24 ஆயிரத்து 179 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று நோயாளா் தொகையில் மெக்ஸிக்கோ 7 ஆம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.