5.2 ரிக்டர் அளவில் துருக்கியில் நிலநடுக்கம்!

mcms
mcms

துருக்கியின் கிழக்கு மாகாணமான மாலத்யாவில் இன்று செவ்வாய்க்கிழமை 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பூதர்ஜ் மாவட்டத்தில் அந் நாட்டு நேரப்படி பிற்பகல் 12.37 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையம் (AFAD) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 8.16 கிலோமீட்டர் (சுமார் 5 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது என்று AFAD தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் இதுவரை எந்த சேதமும் ஏற்படவில்லை என்று உள்துறை அமைச்சர் சுலேமான் சோய்லு டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் இருந்து பெறப்பட்ட ஆரம்ப அறிக்கைகளின்படி, அப்பகுதியில் எந்தவிதமான உயிரிழப்புகளும், சொத்து இழப்புகளும் ஏற்படவில்லை என்று மாலத்யாவின் மேயர் செலாஹட்டின் கூர்கன் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும் மாகாணத்தில் முந்தைய பூகம்பங்களில் சேதமடைந்த கட்டிடங்கள், தற்போதைய நிலநடுக்கத்தால் மேலும் சேதமடைந்துள்ளன என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.