பரசூட் பலூன்கள் மூன்று தரையில் மோதி விபத்து!

balloon 02 as ap 200803 1596491875527 hpEmbed 3x2 992
balloon 02 as ap 200803 1596491875527 hpEmbed 3x2 992

அமெரிக்காவின் வயோமிங்கில் மூன்று பரசூட் பலூன்கள் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

ஒவ்வொரு பலூனும் மேற்கு வயோமிங்கின் டெட்டன் கிராமத்தில் அந்நாட்டு நேரப்படி திங்கட்கிழமை காலை 8 மணிக்கு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூன்று பலூன்களிலும் மொத்தமாக 36 பேர் பயணித்துள்ள நிலையில் 20 பேர் வரை காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்பாராத விதமான கடும் காற்று காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.