வெள்ளம் மற்றும் அனர்த்தங்களில் சிக்குண்டு 30 பேர் தென் கொரியாவில் மரணம்!

1000
1000

தென் கொரியாவில் 46 நாட்கள் தொடர்ச்சியாக பெய்த கனமழைக்குப் பின்னர் உண்டான வெள்ளம் மற்றும் அனர்த்தங்களில் சிக்குண்டு 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காணாமல் போயுமுள்ளனர்.

ஏழு ஆண்டுகளின் பின்னர் தென்கொரியாவில் ஏற்பட்ட மிக நீண்டகால பருவமழை இதுவாகும்.

கொரியாவின் தெற்குப் பகுதியில் பெய்யும் இந்த கன மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி சுமார் 6000 பேர் அவர்களது சொந்த இடங்களிலிருந்து பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தென்கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதாவது 11 மாகாணங்கள் மற்றும் நகரங்களைச் சேர்ந்த 5,900 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர், அவர்களில் 4,600 பேர் பேரழிவுகள் பற்றிய எச்சரிக்கைகளைத் தொடர்ந்து தற்காலிக தங்குமிடங்களில் தங்கியுள்ளதாக யோன்ஹாப் தெரிவித்துள்ளார்.