டொனால்ட் ட்ரம்ப்பை தோற்கடிக்க சீனாவில் திட்டம்!

20 620x330 1
20 620x330 1

2020 ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து சீனா சைபர் தாக்குதலை மேற்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொள்வதாகவும், சீனாவின் பீஜிங் நகரில் இருந்து குறித்த தாக்குதல் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ரொபடோ ஓ ப்ரையன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை தோற்கடிக்கும் விதமாக சீனாவின் குறித்த திட்டம் அமைவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் சீனா குறித்த குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்துள்ளது.