இந்தியாவில் 24 மணி நேரத்தில் 65 ஆயிரத்து 2 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி!

111880616 gettyimages 1210615851 620x330 2
111880616 gettyimages 1210615851 620x330 2

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 65 ஆயிரத்து 2 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 இலட்சத்து 26 ஆயிரத்து 193 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 6 இலட்சத்து 68 ஆயிரத்து 220 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து 57 ஆயிரத்து 382 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

இதனால் இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 18 இலட்சத்து 8 ஆயிரத்து 937 ஆக அதிகரித்துள்ளது. இதனால் குணமடைந்தோர் சதவிகிதம் 71.61 என்ற அளவில் உள்ளது.

ஆனாலும், கொரோனாவினால் கடந்த 24 மணி நேரத்தில் 996 பேர் பலியாகியுள்ளனர். 

இதனால் இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 36 ஆக அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா இறப்பு சதவிகிதம் 1.94 என்ற அளவில் உள்ளது.

இதனால் இந்தியாவில் இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2 கோடியே 85 இலட்சத்து 63 ஆயிரத்து 95 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.