அமெரிக்க இராணுவத்திற்கென விசேட கைப்பேசிகள் வடிவமைப்பு

EYiQH6rWkAAJtZQ
EYiQH6rWkAAJtZQ

அமெரிக்க இராணுவத்தினர் மாத்திரம் பயன்படுத்தக்கூடிய கைப்பேசிகளை சாம்சுங் நிறுவனம் வடிவமைத்து வழங்கவுள்ளது

பொதுவான பயனர்கள் பயன்படுத்தும் கைப்பேசிகளில் பாரிய பாதுகாப்பு குறைபாடுகள் காணப்படுகின்றன. எனினும் அவர்களை பாரிய அளவில் இக்குறைபாடுகள் பாதிப்பதில்லை.

ஆனால் இராணுவத்தினர் உட்பட முக்கிய புள்ளிகள் குறித்த கைப்பேசிகளை பயன்படுத்தும்போது இரகசியங்கள் கசிவதற்கான சாத்தியங்கள் அதிகம் காணப்படுகின்றன.

இதனை தவிர்ப்பதற்காக இவ்வாறானவர்களுக்கு விசேடமான கைப்பேசிகள் வடிவமைக்கப்படுகின்றமை வழக்கமாகும்.

இக் கைப்பேசிகள் இராணுவத்தினரின் விசேட நடவடிக்கைகளிலும் பாரிய பங்களிப்பினை ஆற்றக்கூடியதாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.