சீனாவின் பகுதிக்குள் நுழைந்த அமெரிக்காவின் உளவு விமானம்!

19092018blobid1537378527191
19092018blobid1537378527191

சீன இராணுவம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பகுதிக்குள் அமெரிக்காவின் யூ2 ரக உளவு விமானம் நுழைந்தது தொடர்பில் சீனா கடுமையான கண்டனங்களை வெளியிட்டுள்ளது.

சீனாவின் வடக்கு பகுதியில் போஹாய் வளைகுடாவுக்கும் மஞ்சள் கடலுக்கும் இடையில் உள்ள தென் சீன கடல் பகுதியில் சீன இராணுவம் நேற்று போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. சீனாவின் விமானம் தாங்கி போர் கப்பல்களில் உள்ள விமானங்களும், பீரங்கிகளும் கடலில் உள்ள இலக்குகளை குறிவைத்து சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன.

போர் பயிற்சி நடந்த இந்த இடம் சீனாவின் ராணுவ பகுதி என ஏற்கனவே பிரகடனம் செய்யப்பட்டதாகவும். அதன்படி இந்த பகுதிக்குள் வேறு எந்த நாட்டின் விமானமும் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீன ராணுவம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பகுதிக்குள் அமெரிக்காவின் யூ2 ரக உளவு விமானம் நுழைந்துள்ளது. சீனாவில் விமானம் தாங்கி போர்க்கப்பலுக்கு மேலே அமெரிக்காவின் உளவு விமானம் பறந்து சென்றுள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சீனா, அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த விவகாரம் குறித்து அமெரிக்கத் தரப்பில் உடனடியாக எந்தவித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

இதேவேளை, வர்த்தக போர், தென் சீன கடல் விவகாரம், உய்கூர் இன முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை, என ஒவ்வொன்றாக இரு நாடுகளின் உறவை பலவீனமாக்கிய நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சினை இரு நாடுகளுக்கு இடையில் தீரா பகையை உருவாக்கி உள்ளது.

இந்த நிலையில் உளவு விமானம் உள் நுழைந்தமை தொடர்பில் மேலும் முறுகல் நிலை உக்கிரமடைந்திருக்கிறது.