துருக்கியின் தாக்குதல் முடிவுக்கு வருகிறது

siriya 1
siriya 1

சிரியாவில் துருக்கி வலியுறுத்திய பாதுகாப்பு வலயத்திலிருந்து குர்திஷ் போராளிகள் முழுமையாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தியிருந்த நிலையில் தற்போது குர்திஷ் போராளிகள் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.

ஐக்கிய அமெரிக்காவினால் குறித்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட சில மணித்தியாலங்களில் துருக்கி பாதுகாப்பமைச்சுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அந்தவகையில், தற்போது நடவடிக்கை இடம்பெறும் பகுதிக்கு வெளியே இன்னொரு நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டிய தேவை இல்லை” என அறிக்கையொன்றில் துருக்கி பாதுகாப்பமைச்சு தெரிவித்துள்ள நிலையில், பரவலாக விமர்சனத்துக்குள்ளான இம்மாதம் ஒன்பதாம் திகதி ஆரம்பித்த துருக்கியின் வலிந்த தாக்குதல் முடிவுக்கு வருகிறது.

துருக்கியுடனான எல்லையில் இருந்து குர்திஷ் மக்கள் பாதுகாப்புப் பிரிவு போராளிகள் மற்றும் அவர்களது ஆயுதங்களை அகற்றுவதற்காக துருக்கி, ரஷ்யாவிற்கிடையில் இணங்கப்பட்ட ஒப்பந்தமொன்றின் கீழ் வடகிழக்கு சிரியாவில் சிரிய மற்றும் ரஷ்யப் படைகள் தரையிறக்க முடிவு செய்யப்பட்டிருந்தன.

துருக்கி மற்றும் சிரியாவிற்கிடையில் ஐக்கிய அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டிருந்த யுத்தநிறுத்தம் முடிவுற்றதனைத் தொடர்ந்து குறித்த ஒப்பந்தம் துருக்கி சிரியாவிற்கிடையில் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும், துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோவானுக்குமிடையிலான குறித்த ஒப்பந்தத்தின் கீழ் துருக்கி எல்லையிலிருந்து 30 கிலோ மீற்றர் வரை மக்கள் பாதுகாப்புப் பிரிவுகளை அகற்ற ரஷ்ய இராணுவப் பொலிஸாரும், சிரிய எல்லைக் காவலர்களும் பாதுகாப்பு பணிகளை ஆரம்பிப்பர் என ரஷ்யாவும், துருக்கியும் அறிவித்திருந்த நிலையிலேயே குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.