கொவிட்-19 காரணமாக அதிக பாதிப்பை அமெரிக்கா எதிர்நோக்கியுள்ளது

111776132 mediaitem111776131
111776132 mediaitem111776131

சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 50 இலட்சத்தைக் கடந்துள்ளது.

கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 51 இலட்சத்து 53 ஆயிரத்து 553 ஆக உயர்வடைந்துள்ளது.

8 இலட்சத்து 45 ஆயிரத்து 925 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒரு கோடியே 74 இலட்சத்து 91 ஆயிரத்து 310 பேர் குணமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொவிட்-19 காரணமாக அதிக பாதிப்பை அமெரிக்கா எதிர்நோக்கியுள்ளது.

61 இலட்சத்து 38 ஆயிரத்து 748 பேருக்கு அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில், ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 855 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டாவதாக பிரேஸிலில் 38 இலட்சத்து 46 ஆயிரத்து 965 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ள நிலையில், ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 498 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் 35 இலட்சத்து 39 ஆயிரத்து 712 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ள நிலையில், 63 ஆயிரத்து 657 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.