கொடூரமாக சவுதியில் சித்திரவதை செய்யப்படும் புலம்பெயர்ந்தவர்கள்!

torture 1
torture 1

உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் புலம்பெயர்ந்தவர்கள் தனியான இடமொன்றில் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி அடைத்து வைத்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கொரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் ஆயிரக்கணக்கான ஆபிரிக்க புலம்பெயர்ந்தோரை இவ்வாறு சவுதி அரசாங்கம் அடைத்து வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

சவுதி தடுப்பு மையங்களுக்குள் அடைக்கப்பட்டுள்ள ஆபிரிக்க புலம்பெயர்ந்தோர் தங்களின் நிலை குறித்து விளக்கும் புகைப்படங்களை அனுப்பியதன் மூலம் உலகத்துக்கு அவர்களின் நிலை தொடர்பில் தெரியவந்துள்ளது.

அந்த புகைப்படத்தில், அரேபிய வெப்பத்தால் முடங்கிப்போன நூற்றுக்கணக்கான ஆண்கள் மூடப்பட்ட ஜன்னல்கள் கொண்ட சிறிய அறைகளில் இறுக்கமாக வரிசைகளில் கிடப்பதைக் காட்டுகிறது.

அவர்கள் மத்தியில் ஊதா மற்றும் வெள்ளை போர்வையில் சிலர் சடலமாக கிடப்பதும் தெரியவந்துள்ளது. வெப்பத்தால் இறந்த ஒரு புலம்பெயர்ந்தவரின் உடல் இது என்றும் மற்றவர்கள் உயிர்வாழ போதுமான உணவு மற்றும் தண்ணீர் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.