விஷ தன்மை மிகுந்த பாம்பை வாயில் போட்டு கடித்த குழந்தை!

text 1YROLD11599388126
text 1YROLD11599388126

குழந்தை ஒன்று விஷ தன்மை மிகுந்த குட்டி பாம்பை வாயில் போட்டு விழுங்கிய சம்பவம் உத்திர பிரதேசம் போலாப்பூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை பிற்பகல், ஒரு வயது சிறுவன் தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது பாம்பை பிடித்து விழுங்கியதாகக் கூறப்படுகிறது. அக்குழந்தையின் தாய் எதேர்சையாக குழந்தையின் வாயை பார்த்தப்போது வாயில் பாம்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் பதற்றமடைந்த அக்குழந்தையின் தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். குறித்த குழந்தை மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து சிறுவன் விழுங்க முயன்ற பாம்பு கட்டுவிரியன் என்பதை கண்டறிந்த மருத்துவர்கள், இந்த வகை பாம்பு அதிக நச்சுத்தன்மை உடையது எனத் தெரிவித்தனர். இதையடுத்து சிறுவனுக்கு விஷ எதிர்ப்பு ஊசி செலுத்தி அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து கண்காணித்து வருகின்றனர்.