கொலம்பியாவில் இராணுவ ஹெலிகொப்டர் விபத்து

colambia
colambia

மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவின் இராணுவத் தளத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு 6 பேருடன் புறப்பட்ட விமானப்படைக்கு சொந்தமான ஒரு ஹெலிகாப்டர் அந்நாட்டின் அல்பன் பகுதியில் ஹெலிகொப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்தில் ஹெலிகொப்டரில் பயணம் செய்த 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான விசாரணை நடைபெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் கொலாம்பியா அதிபர் பயணிக்க அவ்வப்போது உபயோகப்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.