சிறுவன் சுஜித் உயிரிழப்பு – மீட்புக்குழுவினரின் முயற்சி வீண்!

sujith
sujith

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்ததனைத் தொடர்ந்து குழந்தையை மீட்க பல்வேறு மீட்புக்குழுவினர் தொடர்ந்து முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை.

சுர்ஜித்தை ரிக் இயந்திரத்தின் மூலம் மீட்கும் முயற்சி ஒருபுறம் நடைபெற்று கொண்டிருக்கும் போது சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணறு சுற்றி உள்ள இடங்கள் அனைத்தும் காவல்துறையினர்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் குழிக்குள் இருந்து இரவு 10.30 மணியளவில் இருந்து சிறுவன் உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்துள்ளார். இதனால் குழந்தை சுஜித் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித்தின் சடலத்தை பேரிடர் மீட்பு படையினர் இன்று அதிகாலை 4.30 மணிக்கு மீட்டனர்.

சிறுவன் சுஜித் உடலில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அதனை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.