ஐ.எஸ் தலைவரின் உடல் ஆழ்கடலில் வீசப்பட்டது

isis leader
isis leader

அல் கொய்தா இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனின் உடலை கடலில் வீசியது போன்று பக்தாதியின் உடலும் ஆழ்கடலுக்கு எடுத்துச்செல்லப்பட்டு வீசப்பட்டது.

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல் பக்தாதி சிரியாவின் வடமேற்கு நகரமான இத்லிப் நகருக்கு அருகே பாரிஷா என்ற கிராமத்தில் உள்ள ஒரு பெரிய வளாகத்தில் பதுங்கி இருப்பதை குர்துக்கள் அளித்த ரகசிய தகவல் மூலம் அமெரிக்கா பக்தாதி பதுங்கி இருந்த வளாகத்தை சுற்றி வளைத்தனர்.

அமெரிக்காவிடம் சரணடையாது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை பக்தாதி வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதில் பக்தாதியும், அவருடன் இருந்த 3 குழந்தைகளும் பலியாகினர். இதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வொஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்கள் மத்தியில் வெளியிட்டார்.

பக்தாதியின் உடல் உடல் ஆழ்கடலில் எடுத்துச்செல்லப்பட்டு வீசப்பட்டு விட்டது. இதை அமெரிக்க இராணுவ தலைமையகம்
பென்டகனில் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் உறுதி செய்தார்.

அல் கொய்தா இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனின் உடலை கடலில் வீசியது போன்று பக்தாதியின் உடலும் ஆழ்கடலுக்கு எடுத்துச்செல்லப்பட்டு வீசப்பட்டது.

பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் உடல்களை புதைக்காமல் கடலில் வீசுவதையே அமெரிக்கா வழக்கமாக கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.