ஊரடங்கு காலத்தில், 350 ஒன்லைன் படிப்புகளை படித்து முடித்து மாணவி!

remote degree online
remote degree online

இந்தியா முழுவதும் கொரோனா பெருந்தொற்றானது மனித சமூகத்தின் அன்றாட வாழ்வியலில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில், முதலில் கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்ட கேரள மாநிலத்தில் தற்போது மாணவி ஒருவர் ஊரடங்கு காலத்தில், 350 ஒன்லைன் படிப்புகளை படித்து முடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள அதேவேளை அவருக்கு பலரும் தமது பாராட்டுதல்களையும் தெரிவித்து வருகின்றனர்.

வேதியியல் பாடப்பிரிவில் இரண்டாம் ஆண்டு முதுகலைப் பட்டம் பயின்று வரும் கேரளாவைச் சேர்ந்த ஆர்த்தி என்ற மாணவி கொரோனா ஊரடங்கு காலத்தினை மிகவும் பயனுள்ளதாக கழித்துள்ளார்.

இவ்வாறான இணைய வழி கற்றலுக்கு, தனது கல்லூரி தலைமை ஆசிரியரான அஜிம்ஸ் ஜி முகமது, ஆசிரியர் நீலீமா மற்றும் இணைய வழி படிப்புகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஹனிவ்வா ஆகியோரின் தூண்டுதலே முக்கிய காரணம் என ஆர்த்தி கூறியுள்ளார்.

பல்வேறு தளங்களில் பல படிப்புகளை முடித்த ஆர்த்தி தங்களுக்கு பெருமை சேர்த்துள்ளதாக மாணவியின் பெற்றோர் பெருமையாக தெரிவித்துள்ளனர்.